Wednesday, 24 August 2016

துளசி செடி வளர்போம் சகல நன்மைகளையும் பெருவோம்.

வீட்டில் ஒவ்வொருவரும்  
துளசி செடி நட்டு வளர்போம்
துளசி செடியை வீட்டில்
வளர்ப்பதன் மூலம் சகலநன்மைகளும்
வளர்ப்பவர்கள் பெறுகின்றனர் துளசிச்செடியில் மூலிகையின்
பயன்கள் நிறைந்துள்ளது வீட்டைச்சுற்றி துளசி செடி்கள் வளர்பதால் வீட்டை சுற்றி மூலிகை வாசமும் தெய்வீக தன்மையும் நிரைந்திருக்கும் வீட்டில் எந்த விதமான தீய சக்திகள் கண் திருஷ்டிகள்
நோய் நொடிகள் அண்டவிடாமல் தடுக்கவும் வல்லமை துளசிச்செடிக்கும் 
அதன்வாசனைக்கும் உண்டு .
துளசி செடியை உங்கள் வீட்டில் வீட்டில் வளர்க்கும்  பொழுது அதில் பூக்கள் அதிக அளவில் வரும் அப்பொழுது ஒரிரு பூக்களை மட்டும் விட்டுவிட்டு மற்றபூக்களை கிள்ளிவிடனும் இப்படி செய்வதால் துளசிசெடி வாடாமல் நீண்டநாள் பசுமையாக இருக்கும் துளசி செடியில் வரும் பூவானது காய்ந்தால் அதில் துளசி விதைகள் இருக்கும் அதை மண்ணில் தூவிவிட்டால்  துளசி செடிகள் முளைக்க ஆரம்பிக்கும்
அதை எடுத்து வேறு தொட்டிகளில் நட்டு நண்பர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் உறவினர்களுக்கும் கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் செடிவளர்க்க இடமிருப்பவர்களுக்கும் கொடுக்கலாம்
துளசி செடி வளர்போம்
சகல நன்மைகளையும்
பெருவோம்.

Tamizh Seidhii Sangamam channel link

https://youtube.com/@tamizhseidhiisangamam?feature=shared 🙏🏻👆🏻