Thursday, 20 April 2017

நோய்தீர்க்கும் முருங்கை முருங்கைமரம்

நோய்தீர்க்கும் முருங்கை
முருங்கைமரம்
முருங்கைமரம் நம் நாட்டில் எங்கும் காணக்கூடியதாக இருக்கின்றது வீட்டின் முன்பக்கத்திலோ அல்லது பின்பக்கத்திலோ முருங்கை மரத்தை வளர்ப்பார்கள் இதற்க்கு தண்ணீர் அவ்வளவாக தேவை இருக்காது
முளைத்த இடத்திலேயே முருங்கை நன்றாக வளர்ந்துவிடுகின்றது முருங்கை மரத்தின் அடி மரம் கிளை இவைகள் உறுதியற்றவை உளுத்த மரம் போல் பட் பட்டென்று உடையக்கூடியவை முருங்கை மரத்தின் இலை பூ பிஞ்சு காய் பட்டை வேர் பிசின் இவைகள் மருந்தாக பயன்படக்கூடியவையாக இருகின்றது 

முருங்கை மரத்தின் இலைகளை முருங்கை இலைகள்  என்று இன்று யாரும் சொல்வதில்லை இது நாம்  உண்ணும் உணவோடு சேர்த்து உண்பதால் இதை கீரைவகைகளுடன் சேர்த்து முருங்கைக்கீரை என்று அழைக்கின்றோம் முருங்கை கீரையில் வைட்டமின் ஏ உயிர்சத்துள்ள கீரை முருங்கை கீரையை ஆகும் 

அகத்தி கீரையை போலவே முருங்கைக்கீரையையும் நிறைய சாப்பிட்டால் குறிப்பிட்ட பலன்களை அடையலாம்
இனி முருங்கை இலை குணப்படுத்திடும் வியாதியைப்பற்றி காண்போம்
ஜீரண சக்தி உண்டாக புளித்த ஏப்பம் குணமாக
சுத்தம் செய்த முருங்கை கீரை ஒருபிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதே அலைவு சோற்று உப்பையும் போட்டு நன்றாக வறுத்தால் அது கருகும்
கருகி நெருப்பு பற்றும் சமையம் இறக்கி ஆறவைத்து அதை தூள் செய்து ஆறு சீசாவில் போட்டு வைத்து கொண்டால் அஜீரணம் ஏற்பட்ட பொழுதும் புளித்த ஏப்பம் வரும் பொழுதும் இரண்டு சிட்டிகை அளவு வாயில் போட்டு வெந்நீர் குடித்தால் பசியுண்டாகும் புளித்த ஏப்பம் அடங்கிவிடும்
குழந்தைகள் வயிற்று உப்பிசம் குணமாக
முருங்கை இலையை சுத்தம் செய்து அதை கையில் வைத்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து சிறிதளவு உப்பை போட்டு கரைத்து குழந்தைகளுக்கு அரைசங்களவுக்கு உள்ளுக்கு கொடுத்து விட்டால் வயிற்று உப்பிசம் தணிந்திடும் .
நீர்க்கட்டு உடைக்க
முருங்கை இலையையும் ,வெள்ளரி விதையையும் மெய்யாக அரைத்து வயிற்றின் மேல் கனமாக பற்று போட்டு வைத்தால் நீர்கட்டு உடையும் ,நீர் இறங்கும்
முருங்கை கீரையை பருப்புடன் சேர்த்து
சமைத்து சாப்பிட்டால் உடல் பலம் பெரும் பித்த சம்பந்தமான வியாதிகள்
குணம்பெறும் உடல் சூடும் தணியும் கண் சம்மந்தமான நோயும் குணமாகும்
முருங்கை  பூ
முருங்கை மரத்தின் பூ மருந்தாக பயன்படுகின்றது தாது விருத்தி உண்டாக முருங்கை மரத்தின் பூவில் 

சிறு வெண்ணிற புழுக்கள் இருக்கும்
இவைகளை கவனித்து ஆய்ந்து எடுத்து கழுவிவிட்டு ஆளாக்குப்பசுவின்பாலில் போட்டு நனறாக கொதிக்கவைத்து இறக்கி இளசூட்டில் கற்கண்டு சேர்த்து படுக்கைக்கு செல்வதற்கு முன்
குடித்துவிடவேண்டும் இந்தவிதமாக
இருபத்தியொரு நாட்கள் குடித்துவந்தால் தாதுவிருத்தியாகும்.
(மேகநோய் குணமாக )
முருங்கைப்பூவும் தூதுவலைப்பூவும் சமஅளவு எடுத்து சுத்தம் செய்து நன்னாரி வேரை கசாயம் வைத்து அதைவிட்டு அந்த பூக்களை மையாக அரைத்து எடுத்து பாக்களவு உருண்டைகளாக செய்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு காலை மாலை வேலைக்கு ஒரு உருண்டை மாத்திரை வீதம் தொடர்ந்து இருபது நாட்கள் சாப்பிட்டு வந்தால் மேகநோய்யாவும் குணமாகும் மருந்து சாப்பிடும் வரை நல் எண்ணெய் கடுகு புளி நீக்கி பத்திய பாதார்த்தமாக சாப்பிடவேண்டும் இதனால் மேகநோய் பூரணமாக குணமாகும் .
முருங்கைப்பிஞ்சு
தாதுவை விருத்தி செய்ய
நார் படியாத மிருதுவான முருங்கைபிஞ்சாக கொண்டுவந்து அதை உமிகாந்தலில் சொருகி வேகவைத்து அதைச்சாறு பிரிந்து ஆழாக்கு பசுவின்பாலில் கலந்து காலையில் மட்டும் தொடர்ந்து இருபத்தியொரு நாட்கள் சாப்பிட்டால் தாது விருத்தியாகும் .
இரத்தம் உற்பத்தியாகும் உடலில் நல்ல பலம் ஏறும்
முருங்கைக்காய்
முருங்கைக்காயை  சமைத்து சாப்பிடலாம் எந்த வியாதியஸ்தர்களும் பயமின்றி சாப்பிடலாம் இது கபத்தை நீக்கிவிடும் இரத்தத்தை விருத்தி செய்யும் தாதுவை காட்டும்
முருங்கைக்காயை வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன
ஒரு அவுன்ஸ் அளவு முருங்கைக்காயில்
ஐம்பத்திரண்டு மில்லிகிராம் வைட்டமின் ஏ உயிர்ச்சத்தும்
பதினான்கு
மில்லிகிராம் வைட்டமின் பி உயிர்ச்சத்தும்
பதினெட்டு மில்லிகிராம் வைட்டமின் பி
2 உயிர்ச்சத்தும்
முப்பத்திநான்கு மில்லிகிராம் வைட்டமின்
சி உயிர்ச்சத்தும்
எட்டு மில்லிகிராம் சுண்ணாம்புச்சத்தும்
ஒன்று புள்ளி ஐந்து மில்லிகிராம் இரும்புச்சத்தும் இருகின்றன
இந்த உயிர்சத்துக்கள் உடலுக்கு பலம் தரக்கூடியதாகவும் வியாதிகளை குணப்படுத்தக் கூடியதாகவும் இருகின்றன . இதை பயன்படுத்தும் முன்பு இதை பற்றி நன்கு தெரிந்த பெரியோர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு பயன்படுத்துங்கள்
இதில் குறிப்பிட்டு இருக்கும் செய்திகளை பிடியுங்கள் சிந்தியுங்கள்
ஆரோக்கியமாக வாழுங்கள் நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நினைவில் வையுங்கள்,

வாழ்க வளமுடன் படித்தமைக்கு நன்றி

Tamizh Seidhii Sangamam channel link

https://youtube.com/@tamizhseidhiisangamam?feature=shared 🙏🏻👆🏻