Tuesday 27 June 2017

(சகல நன்மைகளும் சகல செல்வங்களையும் தரும் பெரியார்களின் ஆசீர்வாதம் )

(சகல நன்மைகளும் சகல செல்வங்களையும் தரும் பெரியார்களின் ஆசீர்வாதம் )

ஆசிர்வாதம் மூலம் அனைத்து
செல்வங்களும் பெறலாம் ..!!
நாம வீட்டில்  உள்ள பெரியவங்க காலில்  விழுந்து ஆசீர்வாதம் வாங்வது  உண்டா..?
சில வீடுகளில்  பிறந்த நாள்,
திருமண  நாள், வெளியூர் வெளிநாடு போகும்போதும் , தீபாவளி அன்றைக்கு  புது புடவை புது  ஆடை அணியும்  இது மாதிரி சந்தர்ப்பங்களில்  பெரியவங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது  உண்டு.
பெரியவர்கள்  - வயதானவர்கள்  - காலில் விழுந்து ஆசி பெற்றால் நம்ம சக்தி அதிகப்படும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்
ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது.
அசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல- ஆசிர்வாதம் செய்வதும் கூட உங்களுக்கு சக்தியை கொடுக்கும்,
நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில்தான் விஷயம் இருக்கிறது.
100 வயது பெரியவரிடம் ஆசி வாங்னேன்..அவர் தீர்க்காயுசா இருப்பா என்றார்,ரெம்பவே சந்தோஷமா இருந்துச்சு!!
ஐயா எவ்வளவு நாளா இந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஆசி பண்றீங்க என்றேன்.
அது ஒரு 30 - 40 வருசமா அப்படித்தான் ஆசி பண்றேன் என்றார்.
அவரது தீர்க்காயுளுக்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.!
சிலர் காலில் விழுந்தால் இருக்கட்டும் எந்திரிங்க என்பார்கள்.
அய்யோ என் காலில் போய் விழுந்துட்டு என பதறுவர்.
இதெல்லாம் தவறு. ஆசி வழங்காமல் புறக்கணித்தல் பாவம் என்கிறது சாஸ்திரம்.
புது மணமக்கள் காலில் விழுந்தால் தீர்க்காயுஸ்மான் பவ என ஆணுக்கும்,
தீர்க்க சுமங்கலிமான் பவ என பெண்ணுக்கும் ஆசி வழங்கலாம் ...
வயதானவர்கள், சகல தோசங்களும் நீங்கப்பெற்று சகல செல்வங்களும் பெற்று ,குடும்ப ஒற்றுமையுடன்,
நீண்ட ஆயுளுடன் வாழுங்க  -- "
வாழ்க வளமுடன்" -- என்று ஆசிர்வதிக்கலாம் ..
தமிழில் அழகான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை பிறருக்கு ஆசியாக கொடுங்கள். அவர்களுக்கும் அவை கிடைக்கும் உங்களுக்கும்
அவை வந்து சேரும்..இது பிரபஞ்ச விதி .
"வாழ்க வளமுடன்" என்பது ஒரு மிகவும் சக்தி வாய்ந்த மந்திரச் சொல்லாகும்..! 
இப்படி வாழ்த்துவதால் பிரபஞ்சசக்தி
அந்த வார்த்தைகளை உங்களுக்கும் உங்களை சார்ந்தோரையும் வளமாக வாழ வைக்கிறது என்பது பலரது அனுபவ உண்மை,
நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. ஆய்வின்படி மனிதனின் காலில்தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறது.
ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது -  வாய்ப்பு கிடைத்தால்  - அவர்களின் காலில்விழுந்து  ஆசி பெறும் போது அவர்களின் சக்தியும் ஆசியும்  நமக்கும் கிடைக்கிறது.
காலில் விழுந்து வணங்குவதின்  மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது.
மேலும் ஆசி வழங்குபவர்கள்
சொல்லும் வார்த்தைகளில் அதிக சக்தி இருக்கிறது.
மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது.
பல பாவங்களையும், தோஷங்களையும் கூட அது போக்குகின்றதாம்
பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுவதை பழக்கப்படுத்தி் கொள்ளுங்கள் ..!
உங்கள் சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்,
(எல்லாவளமும் பெற்று
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் இயற்கையோடு இணைந்து இயற்கையின் ஆசியோடு நலமுடன்
வாழுங்கள் நன்றி )

படித்ததில் பகிர்ந்தது

Tamizh Seidhii Sangamam channel link

https://youtube.com/@tamizhseidhiisangamam?feature=shared 🙏🏻👆🏻