Monday, 24 July 2017

பண்டிகைகளும் பத்திரிகைக்காரர்களும் pandigaigalum pathrikkaikarargalum

📹 📷 📝
( பண்டிகைகளும் பத்திரிகைக்காரர்களும்) 
பத்திரிகைக்காரரா நீங்க,  முதலமைச்சரையும் நேர்ல பாப்பீங்கல்ல, பிரதமரையும் நேர்ல பாப்பீங்களாமே..
அன்னைக்கு டிவில உங்களைப்பார்த்தேன், தளபதி பக்கத்துலையே நின்னீங்க.
ரகுமான், இளையராஜா நிகழ்ச்சிக்கெல்லாம் டிக்கெட் ஈசியா கிடைக்குமாமே. எந்த அதிகாரிங்ககிட்டக்கூட நீங்க சுலபமா பேசலாம். பஸ்சு, டிரெயின்ல வேற சலுகையெல்லாம் கிடைக்குமாமே.

காதில் இன்பத்தேன் வந்து பாயும் பத்திரிகையாளனின் ஒருபக்கம் இதுதான்.

ஆனால், மறுபக்கம் இத்தனைக்கும்  200 மடங்கு எதிரான தனிப்பட்ட வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நடமாடும் ஒரு எந்திரமயமான வாழ்க்கை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை அந்தப் பத்திரிகையாளரின் குடும்பத்தினரே முதலில் நம்ப மாட்டார்கள். ஊரே பண்டிகையை  ( தீபாவளி  ) கொண்டாடும்,  குடும்பத்தினர் காத்திருக்க தெருத்தெருவாக அலைந்து பட்டாசு விற்பனை ,  துணி விற்பனையை செய்தி  சேகரித்துக்கொண்டிருப்பார். தன் குடும்பத்திற்காக துணி  எடுக்கக்கூட நேரம் இருக்காது . சொந்தங்களைப் பார்க்க லட்சக்கணக்கானோர் பேருந்து ,  ரயில்களில் செல்வதைச்  செய்தியாக்கிவிட்டு , ஆளே இல்லாத திருப்பூர் காய்ந்துபோன பரோட்டாக்கடைகளைத் தேடிக்கொண்டிருப்பார். ஊரே விடுப்பில் இருக்க இவர் மட்டும் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பார். வெளியே நடக்கும் அத்தனை நிகழ்வுகளிலும் பங்கேற்றுக்கொண்டே பணியையும் பார்க்கவேண்டி இருக்கும். கொண்டாட்டங்களை செய்திகள் ஆக்குவார். ஆனால் தன் குடும்பத்தோடு, நண்பர்களோடு  கொண்டாட முடியாது.உலகம் விழிக்கும்போது உறங்கப்போவார். உலகம் உறங்கப்போகும்போது விழித்தெழுவார்.உண்மையில் பரிதாபத்துக்குரிய ஒரு துறை பத்திரிகை மற்றும் ஊடகத் துறைதான். அருமை பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி நண்பர்களுக்கு சமர்பணம் 

( பத்திரிக்கையாளர்களை மதிப்போம் போற்றுவோம் )

படித்ததில் பகிர்ந்தது
📹 📷 📝

Tamizh Seidhii Sangamam channel link

https://youtube.com/@tamizhseidhiisangamam?feature=shared 🙏🏻👆🏻