சென்னை திருவொற்றியூர்.......
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்த்த பிரசித்தி பெற்ற அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடைஅம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழா 21/9/2017 வியாழக்கிழமை கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது முதல் நாளான வியாழக்கிழமை தபசு அலங்காரத்திலும் இரண்டாம் நாள் வெள்ளிகிழமை பராசக்தி அலங்காரத்திலும் முன்றாம் நாள் சனிக்கிழமை நந்தினி அலங்காரத்திலும் நான்காம் நாள் ஞாயிற்று கிழமை கௌரி அலங்காரத்திலும்
ஐந்தாம் நாள் திங்கள்கிழமை பத்மாவதி அலங்காரத்திலும்
ஆறாம் நாள் செவ்வாய் கிழமை உமாமகேஸ்வரி அலங்காரத்திலும் ஏழாம் நாள் புதன்கிழமை இராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும்
எட்டாம் நாள் வியாழக்கிழமை மகிஷாசூரமர்தினி அலங்காரத்திலும்
ஒன்பதாம் நாள் வெள்ளிகிழமை சரஸ்வதி அலங்காரத்திலும்
பத்தாம் நாள் மீனாட்சி அலங்காரத்திலும் அம்மன் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்
இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும்
பத்து நாட்களும் லட்ச்சார்ச்சனையும் அருள்மிகு அம்மன் மாடவீதி வளம் மற்றும் ஆன்மீக இசை நடனம் மற்றும் பரதநாட்டியம் யோக இசைக்கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது
நவராத்திரி உற்சவ நாட்களில் அம்மன்
சன்னதி மற்றும் கொடி மரத்தையும் சேர்த்து 108 சுற்றுகள் சுற்றி வந்தால் வேண்டுவன நிறைவேறும் என்பதால் எராளமான பக்தர்கள் அம்மன் சன்னதியையும் கொடிமரத்தையும்
சுற்றி வலம் வந்து பக்தியோடு வழிபட்டனர்
நிகழ்ச்சியின் இறுதி நாளான சனிக்கிழமை 30/9/2017
சந்திரசேகரர் பாரி வேட்டையும்
அருள்மிகு தியாகராஜசுவாமி மாடவீதி வளம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
The news videos & programmes stories of the Tamizhseidhiisangamam is published only to make good news for the people and to create awareness for the people it is not for any one to hurt Thankyou. Tamizhseidhiisangamam T.suriyaprasad
Sunday, 15 October 2017
அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடைஅம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது 21/9/2017___30/9/2017
-
இத்தனை வகையான நீர்நிலைகளா ! Neer nilaigal water levels (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Wate...
-
ஓலைச்சுவடிகள் எழுதுவதற்காக பயன்படுத்தப்படும் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம்,தாழிப்...
-
பதிவு தேதி 10/5/2017 சித்தர்கள் அருள் குரு அருள் பெற சித்தர்கள் போற்றித் தொகுப்பு கடவுள் வாழ்த்து 👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽 ( 1 ) வாக்குண்டா...