1/1/2018 ___2/1/2018
திருவாலங்காடு வடரண்யேஸ்வரர் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகோயில் உள்ளிட்ட.தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் புத்தாண்டு தினத்தில் கோயில்களில் குழுமியிருந்து சங்கநாதம் மேளதாளம் வாத்தியங்களுடன் சிவபெருமானுக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதணை செய்து பக்தி பெருக்குடன் வழிபட்டனர் .
திருவள்ளூர் மாவட்டத்தில்.உள்ளஆடல் சபைகளில் முதன்மை சபையாக விளங்கும் காரைக்கால் அம்மையார்முக்தி பெற்ற.தளமான இரத்தினசபையான திருவாலங்காடு வடரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.அதில் கூத்தபெருமான் சிவன் ஒற்றை காலை தூக்கியவாறு மறுகாலில் திருநடனம்புரியும் நடராஜர் உற்சவர் திருமேனிக்கு பால் பன்னீர் புஷ்பம் மஞ்சள் விபூதி தேன் தயிர் என பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு அபிஷேக ஆராதனை வெகுவிமரிசையாக நடந்தது..இதில் காஞ்சிபுரம் சித்தூர் வேலூர் அரக்கோணம் திருத்தணி பள்ளிப்பட்டு திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட.பல்வேறு பகுதிகளில் இருந்து இருபதாயிரம் பேர் வடாரேன்யேஸ்வரர் கோயிலின் ஆருத்ரா நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் .அதே போன்று
திருவொற்றியுர் அருள்மிகு வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசாமி கோயில் ஆருத்ரா தரிசனம் பிரம்மாண்டமாகநடைபெற்றது.
அதில் ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள் விடிய விடிய கண்விழித்து அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டனர் .பின்னர் சிவனடியார்கள் ஓதுவார்கள் பஜனைகளில் பங்கேற்று சிவபெருமானை தோளில் சுமந்து நான்கு மாட வீதிகளில் வலம் வந்து வடிவுடையம்மன் உடனறை தியாகராஜரை வழிபட்டனர் .இதில் திருவள்ளூர் காஞ்சிபுரம் கும்முடிப்பூண்டி சென்னை பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளாக பக்தர்கள் உடன் திருவள்ளூர் மாவட்ட.ஆட்சியர் சுந்தரவல்லியும் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் தக்கார் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் பங்கேற்று ஆடல் பெருமானின் ஆசியை பெற்றனர் .