Tuesday, 3 April 2018

அம்மன் போன்று பிரதிபளித்து மாறிய விநாயகர்

சென்னை ஏப்ரல் .3

சென்னை இராயபுரம் பகுதியிலுள்ள வட பத்திர காளியம்மன் கோயில் எதிரில், குமாரசுவாமிதெருவில் சுமார் 50 வருடங்களுக்கு பழமையான சிறிய வலம்புரி விநாயகர் கோயில் ஒன்று உள்ளது.

இந்த கோயிலில் உள்ள விநாயகர் சிலையானது இன்று 7 மணி அளவிலிருந்து திடீரென அம்மன் போன்று பிரதிபளித்து மாறியுள்ளதால் அப்பகுதி மக்கள் கூட்டம்கூட்டமாக தரிசித்து செல்கிறார்கள்.

மாலை நேரத்திலிருந்து சுமார் 10000 பேர் இதுவரை தரிசித்து சென்றதாக அப்பகுதியினர் கூறினார்கள்.

kungfu news Chennai