சென்னை திருவொற்றியூர்
Chennai Thiruvottriyur temple
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றஅருணகிரிநாதர் பட்டினத்தார் இராமலிங்க சுவாமிகள் சுந்தரர்
திருஞானசம்பந்தர் கம்பர் போன்ற இன்னும் பல அடியவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம்
அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயில்
இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி உற்சவ விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது
தொண்டை மண்டல சிவத்தலங்களில்
ஒன்றாகிய திருவொற்றியூரின் கண் வீற்றிருக்கும் அருள்மிகு வடிவுடைஅம்மன் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வீற்றிருக்கும்
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 20/10/2017 வெள்ளிக்கிழமை முதல் 24/10/2017 செவ்வாய்க்கிழமை வரை மாலையில் அபிஷேகமும் பழனியாண்டவர் உற்சவமும்
25/10/2017 புதன் கிழமை மாலை கந்தசஷ்டி உற்சவமும்
26 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை அருள்மிகு
பால சுப்ரமணியர் திருக்கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது
7 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் வழிபாடுகள் நடைபெற்றது
இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.