Tuesday, 7 August 2018

காவேரிமருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சரும் மூத்தபத்திரிக்கையாளரும் ஆன முத்தமிழறிஞர் மு.கருணாநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

7,8,2018
காவேரிமருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சரும் மூத்தபத்திரிக்கையாளரும் ஆன முத்தமிழறிஞர் மு.கருணாநிதி சிகிச்சை பலனின்றி காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார் இவரது இழப்பு தமிழகமட்டுமின்றி இந்திய அரசியல் தலைர்வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த பன்னிரண்டுநாட்களுக்கு
மேலாக சிறுநீரகத்தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்குறைவால் சென்னை காவிரி மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முன்னாள்
முதலமைச்சர் மு.கருணாநிதி மருத்துவர்களின் தொடர் போராட்டத்தில் அவ்வப்போது உடல்நிலை தேறிவந்த நிலையில் அவரது உடலுறுப்புகள் முற்றிலுமாக செயலிழந்து இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது இது தி மு க வினரைமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அணைத்து கட்சியினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தியது இவரது உயிரிழந்த செய்திக்குறித்து ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் பரவிய தகவலால் ஒட்டுமொத்த மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர் இவரது உடல் இராஜாஜி ஹாலில் வைத்து இறுதி மரியாதை செய்யப்படவுள்ளது இதில் பாரதபிரதமர் நரேந்திரமோடி காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி இராகுல் காந்தி உள்ளிட்டோரும் அண்டைமாநிலங்களான கர்நாடக முதல்மைச்சர் குமாரசுவாமி கேரள முதல்வர் பினராயிவிஜயன் ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு மாநிலங்களின் முதல்வர்களும் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்ய உள்ளனர் இராஜஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள
மு கருணாநிதி அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழகத்தின் பலவேறு பகுதியிலிருந்து அவரது கட்சி  தொண்டர்கள் தமிழ்ப்பற்றாளர்கள் திராவிடக்கழகத்தோழர்கள் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பலவேறு கட்சிகளின்
தொண்டர்கள் திரண்டுவருகின்றனர் இதனால் ஏராளாமான போலீசார் சென்னைமுழுக்க புறநகர் பகுதிகளிலும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இந்தநிலையில் தமிழகஅரசு இரண்டுநாள் அரசுநிகழ்ச்சிகளை ரத்துசெய்து விடுமுறை அறிவித்துள்ளது
கலைஞர் மு.கருணாநிதியின் இழப்பு ஓட்டுமொத்த தமிழகத்தையே கண்ணீர்க்கடலில் ஆழ்த்தியுள்ளது
தமிழ்ப்பற்றாளர் மூத்தப்பத்திரிக்கையாளர் பழுத்த அரசியல்வாதி தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்த தமிழ்ப்பற்றாளர் போன்ற என்னற்ற புகழுக்கு சொந்தக்காரரான கலைஞரின் பேரிழப்பு தமிழ்சமுதாயத்திற்கே மிகப்பெரிய பேரிழப்பு ஆகும் .

Tamizh Seidhii Sangamam channel link

https://youtube.com/@tamizhseidhiisangamam?feature=shared 🙏🏻👆🏻